புதையலுக்காக இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி- தந்தை உள்பட 9 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 April 2022 10:36 PM IST (Updated: 27 April 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

புதையலுக்காக இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற தந்தை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

யவத்மால், 
புதையலுக்காக இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற தந்தை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
 நரபலி கொடுக்க முயன்ற தந்தை
யவத்மால் மாவட்டம் பாபுல்காவ் தாலுகா பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் படிப்பிற்காக மட்னி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அண்மையில் தனது வீட்டிற்கு வந்திருந்தார். இளம்பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களாக புதையலுக்காக வீட்டில் மாந்திரீக சடங்குகளை செய்து வந்தார்.
 கடந்த 25-ந் தேதி வீட்டிற்கு மந்திரவாதி மற்றும் சிலர் வந்தனர். பின்னர் சிறுமியை வைத்து சடங்குகளை செய்து நரபலி கொடுப்பதற்காக குழி தோண்டி உள்ளனர். தந்தை முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி தனது தோழி வீட்டிற்கு சென்றாள்.
9 பேர் கைது
பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை தோழியின் பெற்றோரிடம் தெரிவித்தாள். இதன்படி அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை நரபலி கொடுக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை, மந்திரவாதி என 9 பேரை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி யவத்மால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திலிப் புஜ்பால், பிடிபட்ட 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story