அரசிடம் ரூ.11.66 கோடி இழப்பீடு பெற்றவர்கள் மீது வழக்கு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 April 2022 10:45 PM IST (Updated: 27 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

நிலம் கையகப்படுத்தியதற்காக அரசிடம் போலி ஆவணங்களை செலுத்தி ரூ.11 கோடியே 66 லட்சம் இழப்பீடு பெற்று சென்ற நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தானே, 
நிலம் கையகப்படுத்தியதற்காக அரசிடம் போலி ஆவணங்களை செலுத்தி ரூ.11 கோடியே 66 லட்சம் இழப்பீடு பெற்று சென்ற நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நிலம் கையகப்படுத்தும் பணி
மும்பையில் இருந்து பிவண்டி வழியாக குஜராத் மாநிலம் வதோதராவிற்கு செல்லும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி பிவண்டி தாலுகா நந்திதானே கிராமத்தில் நடந்தது. இதில், 8 பேருக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். 
அதற்கான இழப்பீடு தொகையை துணை கோட்ட அலுவலகத்தில் ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ள நில உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
போலி ஆவணங்களை செலுத்தி...
இதன்படி சிலர் ஆவணங்களை செலுத்தி இழப்பீடு பெற்று சென்றனர். இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை தணிக்கை செய்தனர். இதில் ஆதார் மற்றும் பான்கார்டுகள் போன்ற போலி ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மர்ம நபர்கள், போலி ஆவணங்களை சமர்பித்து ரூ.11 கோடியே 66 லட்சம் அளவில் இழப்பீடு பெற்று சென்றது தெரியவந்தது.
மோசடி குறித்து அதிகாரிகள் சாந்தி நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போலி ஆவணங்களை செலுத்தி இழப்பீடு பெற்று சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story