குலசேகரம் அருகே மாயமான தொழிலாளி கல்குவாரியில் பிணமாக மீட்பு


குலசேகரம் அருகே மாயமான தொழிலாளி கல்குவாரியில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 April 2022 10:53 PM IST (Updated: 27 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே மாயமான தொழிலாளி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அருமனை, 
குலசேகரம் அருகே மாயமான தொழிலாளி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான தொழிலாளி
குலசேகரம் அருகே திருநந்திக்கரை வாழைவிளையை சேர்ந்தவர் பூயன் (வயது 66). கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 5 மகள்களும் உள்ளனர். இதில் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 
பூயன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் குடும்பமும் வறுமையான சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பூயன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து வசந்தா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பூயனை தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று அருமனை அருகே களியலில் ஐத்துளிமலை கல்குவாரி பகுதியில் உள்ள குட்டையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கடையல் போலீசாருக்கு தகவல் வந்தது.. அதைத்தொடர்ந்து அந்த உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அது மாயமான பூயனின் உடல் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூயன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story