கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்- கலெக்டர்

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்- கலெக்டர்
x
தினத்தந்தி 28 April 2022 12:30 AM IST (Updated: 27 April 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிப்பாளையம்:-

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி

நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். முககவசம் என்பது உயிர்கவசம் என்பதை உணர்ந்து தவறாது முககவசம் அணிய வேண்டும். நாள்தோறும் சுத்தமான முக கவசத்தை அணிவது அவசியமாகும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 
பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சுவையின்மை, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, உடற்சோர்வு போன்ற ஏதாவது அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சோதனை செய்து கொள்வது அவசிமாகும். 

ரூ.500 அபராதம்

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டு, கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகை மாவட்டத்தை மாற்ற முன்வர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story