கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை மறுநாள் நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை மறுநாள் நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 27 April 2022 11:13 PM IST (Updated: 27 April 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை மறுநாள் நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 29-வது மெகா முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், 

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கடந்த 3 மாத இடைவெளிக்குப்பின் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது. எனவே பொதுமக்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமி நாசினி கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி 

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 101 சதவீதம், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 95 சதவீதம் மற்றும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 6 சதவீதமாகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்த முன்கள பணியாளர்கள்,

 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கொரோனா பரவலை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-ம் தவணை செலுத்த வேண்டி உள்ளவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவைப்படுவோர் உடனடியாக நாளை மறுநாள் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story