தக்கலையில் கடைகளில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தக்கலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை,
தக்கலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல்
பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவின்படி சுகாதார அலுவலர் ராஜாராம் தலைமையில் ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் ஊழியர்கள் தக்கலை, மேட்டுகடை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, மொத்தம் ரூ.35 ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story