தக்கலையில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு


தக்கலையில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 11:22 PM IST (Updated: 27 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தக்கலை, 
தக்கலையில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.
சிறைபிடிப்பு
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டன. அந்த லாரிகள் நேற்று இரவு 9.15 மணியளவில் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது அவற்றில் இருந்து பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் பாய்ந்தது. இதை பார்த்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது லாரிகளில் மீன் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலைய வளாகம் அருகே கொண்டு சென்று நிறுத்தினர். தொடர்ந்து லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story