சாராய விற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சாராய விற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 April 2022 11:24 PM IST (Updated: 27 April 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர்பகுதியில் சாராய விற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் எங்கு பார்த்தாலும் சாராய பாக்கெட்டுகளாக உள்ளது. இதனால் அவ்வழியே பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் அதனை கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. 

மேலும் கள்ளச்சாராயம் விற்கும் மர்மநபர்கள் சாலைகளிலேயே நின்றுகொண்டு பட்டபகலில் விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story