வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
தியாகதுருகம் அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்ற தலைவர் ராமசாமி வரவேற்றார். முகாமில் எஸ்.ஒகையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்களை மருத்துவகுழுவினர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர்.
முன்னதாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் ரவின், உமா நந்தினி, மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர் எத்திராஜ், அவைத்தலைவர் சாமிதுரை, ஒன்றிய துணை செயலாளர் சாந்தி கணேசன், ஊராட்சி துணைத்தலைவர் புவனேஸ்வரி மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story