காசு வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
நாட்டறம்பள்ளி பகுதியில் காசு வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் வெலக்கல்நத்தம் பகுதியில் ஓட்டல் பின்புறம் உள்ள மாந்தோப்பில் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 35), வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (22), பெரியகரம் பகுதியை சேர்ந்த கோபி (23) ஆகிய 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story