ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 11:48 PM IST (Updated: 27 April 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாதன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கணபதி, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு 850 ரூபாய்க்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளும் ஒரே மாதிரியான ஊதிய உயர்வு அளித்து அரசாணை வெளியிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 10,000 கூலி வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story