கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு அவசியம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுபர்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுபர்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மீண்டும் துரிதப்படுத்துதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது :-
கொரோனா தடுப்பூசி
ராணிப்பேட்டை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநிலத்தில் கடைசி இடத்தில் இருக்கிறது. பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்து வருகின்றனர். தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு பரவத் தொடங்கி இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொய்வின்றி மீண்டும் விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் யாரெல்லாம் தடுப்பூசி முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை அன்று நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
மஞ்சப்பை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த 2 வாரமாக கைப்பற்றப் பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை வழங்குவதை கட்டாயம் தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும்.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story