கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
கீழக்கரையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை
கீழக்கரையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சில நாட்களாகவே வெளி மாநிலங்களில் இருந்து பல்வேறு நபர்கள் ஊருக்குள் திரிவதாக பொதுமக்கள் கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். அதன்படி கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் உத்தரவின்பேரில் நாள்தோறும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தர் தலைமையில் போலீசார் கீழக்கரை கடற்கரைப்பகுதியில் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கடற்கரைப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் தனியாக அமர்ந்திருந்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது மிளகாய்பொடி, கம்பி, வாள் ஆகியவைகளை வைத்திருந்தனர். இந்த ெபாருட்களை பழைய கட்டிடத்தில் பதுக்கி வைத்து, இரவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்கள் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வீடுகளில் நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்து பிரித்து எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதும் தெரியவந்தது.
அதன்படி கீழக்கரை போலீசார் உச்சிப்புளி மாந்தோப்பு லோகேஸ்வரன்(வயது23), வைரவன்கோவில் ஹரிகிருஷ்ணன்(22), மோகன்தாஸ் , கீழக்கரை மீனாட்சிபுரம் கார்த்திக்(20), கீழக்கரை புது கிழக்குதெரு செய்யது அகமது ரிபான் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story