கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகள்:கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
ராமநாதபுரம்
மத்திய அரசின் முன்னேறி வரும் மாவட்ட பட்டியலில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக அரசின் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம்கபூர் நேரில் ஆய்வு செய்தார். மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்கா அமைக்கும் பணியினையும், ராமநாதபுரம் நகராட்சி முத்தாலம்மன் கோவில் தெருவில் நவரத்னா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் இயங்கி வரும் சிறுதானிய உணவுகள் தயாரிக்கும் கூடத்தையும், தேவிபட்டிணம் அன்னை சத்யா நினைவு குழந்தைகள் மையத்தினையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையினையும், திருஉத்தரகோசமங்கையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் விதை சுத்திகரிப்பு நிலையத்தினையும், சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி நிலையத்தினையும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம்கபூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சங்கர்லால் குமாவத், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் வீரணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேக் அப்துல்லா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரகுவீரகணபதி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story