ஏனாதி ஊராட்சி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா
ஏனாதி ஊராட்சியில் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியை சுற்றி உள்ள கிராமங்களான மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் கண்மாயில் மீன்பிடிக்க வந்தனர்.
பலவகை மீன்கள் கிடைத்தன
இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கரை மேல் உள்ள விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் வெள்ளை துண்டு வீசினர். பின்பு பொதுமக்கள் பெரியகண்மாயில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் பொதுமக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால், சிலேப்பி, குரவை உள்ளிட்ட பலவகை மீன்கள் பிடித்தனர்.
பொதுமக்கள் சிலரின் வலையில் தண்ணீர் பாம்புகள் சிக்கி பொதுமக்களை அச்சுறுத்தியது. இதையடுத்து பிடிக்கப்பட்ட மீன்களை கிராமமக்கள் வீட்டிற்கு எடுத்து ெசன்று சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story