சோளிங்கரில் கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்த குழந்தை
சோளிங்கரில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் கால்வாயில் குழந்தை தவறிவிழுந்தது.
சோளிங்கர்
சோளிங்கர் நகராட்சி 6-வது வார்டு பகுதியில் உள்ள ஒத்தவாடை தெரு கிழக்கு பகுதியில் சோளிங்கர் நகராட்சி சார்பில் கால்வாய் தூர்வாரும் பணி நகராட்சி சார்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
பணிகள் முடிந்த பின்பும் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூடாமல் விட்டுவட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவர் தனது 2½ வயது குழந்தை மித்ராவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சோளிங்கரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளில் இருந்து குழந்தையை இறக்கி விட்டுவிட்டு, மருந்துகளை எடுக்கும்போது குழந்தை நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டது.
உடனடியாக விவேக் கால்வாயில் குதித்து குழந்தையை மீட்டார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேராவில் பதிவான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இது போன்ற விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story