செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாக வேள்வி


செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாக வேள்வி
x
தினத்தந்தி 28 April 2022 12:14 AM IST (Updated: 28 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாக வேள்வி நடைபெற்றது.

பாடாலூர், 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலூகா, செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறும்.  அதுபோல் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாக வேள்வியில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு மஹாபூர்ணா குதியும், தொடர்ந்து குபேர பெருமானுக்கு பால், தயிர், கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தோடு மகா தீபாராதனையும் நடைபெற்றது. 
குபேர யாக வேள்வியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவிலங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story