தேசிய அளவிலான ஆக்கி போட்டி:தமிழக அணியில் காரைக்குடி மாணவி
தேசிய அளவிலான ஆக்கி போட்டிக்கு தமிழக அணியில் காரைக்குடி மாணவி தேர்வு பெற்றார்.
காரைக்குடி,
தேசிய அளவிலான 12-வது இந்தியா ஆக்கி சப்-ஜூனியர் வீராங்கனைகளுக்கான போட்டி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக அணிக்கான தேர்வு சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது. அதில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி கலந்துகொண்டு தமிழக அணிக்கு தேர்வு பெற்றார். இவர் தற்போது கோவில்பட்டியில் நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வருகிறார். தமிழக அணிக்கு தேர்வு செய்த மாணவி பிரியதர்ஷினியை பள்ளிக்குழு தலைவர், செயலர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி இயக்குனர் முத்துகண்ணன், உடற் கல்வி ஆசிரியர் ரெத்தினராஜா உள்பட ஆசிரியர்கள், சிவகங்கை மாவட்ட ஆக்கி சங்க செயலர் தியாகபூமி மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story