பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story