பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஆர்.டி.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்வு


பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஆர்.டி.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்வு
x
தினத்தந்தி 28 April 2022 12:30 AM IST (Updated: 28 April 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஆர்.டி.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பெரம்பலூர், 
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர், பட்டியலை அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஆர்.டி.ராமச்சந்திரன் மீண்டும் தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தின் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் மீண்டும் தேர்வாகி உள்ளார். மாவட்ட அவைத்தலைவராக குணசீலன், மாவட்ட இணை செயலாளராக ராணி, மாவட்ட துணைச் செயலாளர்களாக லெட்சுமி, முன்னாள் எம்.பி. சந்திரகாசி, மாவட்ட பொருளாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக வீரமுத்து (பெரம்பலூர் தொகுதி), கோவிந்தன் (குன்னம் தொகுதி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

Next Story