அறந்தாங்கி அருகே மாடு-குதிரை வண்டி பந்தயம்


அறந்தாங்கி அருகே மாடு-குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 28 April 2022 12:37 AM IST (Updated: 28 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

அறந்தாங்கி:
மாடு, குதிரை வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் வீரமுனி ஆண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று  வைரிவயல் வீரமுனி ஆண்டவர் கோவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரைவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள்  கலந்து கொண்டன. 
பரிசு 
போட்டியில் பெரியமாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டுகுதிரை என நான்கு பிரிவுகளாக காலை, மாலை என  பந்தயம் நடைபெற்றது. 
பந்தயத்தில் 83 மாடுகள், 87 குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கை நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன.
போட்டியில் கலந்துகொண்ட வெற்றிபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும், சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகையுடன், கோப்பைகளும் வழங்கப்பட்டது. பந்தயத்தை திரளான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story