தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2022 12:41 AM IST (Updated: 28 April 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 65). தொழிலாளியான இவருக்கு 3 மனைவிகள், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். முதல் இரண்டு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் 3-வது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி, நெடுவிளை பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Next Story