திருமயம் அருகே புதுப்பெண் விஷம் குடித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது
புதுப்பெண் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.
திருமயம்:
திருமயம் அருகே கொப்பரம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி தீபா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தீபா வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் தீபாவின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார். மேலும் போலீசார் விசாரணையில் தீபாவுக்கும், வெள்ளைச்சாமி (35) என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பு இருந்தே போனில் பேசி பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் தீபா, வெள்ளைச்சாமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு வெள்ளைச்சாமி மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா விஷம் குடித்து இறந்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீபா தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த வெள்ளைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story