பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது


பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
x
தினத்தந்தி 28 April 2022 12:49 AM IST (Updated: 28 April 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தைச் சேர்ந்த முத்தையா மகன் கல்யாணசுந்தரம் (வயது 24). இவர் சங்கரன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த கல்யாணசுந்தரம் மதுபோதையில் தகராறு செய்து பஸ் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 

இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் மோகன் அளித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story