முளைப்பாரி விழா


முளைப்பாரி விழா
x
தினத்தந்தி 28 April 2022 12:50 AM IST (Updated: 28 April 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே முளைப்பாரி விழா நடந்தது.

மேலூர், 
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் சித்திரை மாதத்தில் அம்மன் தெய்வத்தை வழிபடும் முளைப்பாரி விழா நடைபெற்றது. வெள்ளலூர் கிராம மக்கள் கடந்த 2 வாரங்களாக கடுமையான விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். கருங்கல்மந்தையில் ஒன்று கூடிய பக்தர்கள் அங்கிருந்து பாரம்பரிய வழக்கப்படி அம்மன் கரகம் முன்னே செல்ல அதன் பின்னர் அம்மன் முளைப்பாரிகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஏழைகாத்த அம்மன்கோவில் வீட்டில் சிறப்பு பூஜைகளுடன் வழிபட்டு முக்கிய பல இடங்கள் வழியாக சித்திரைபூகுளத்திற்கு வந்து அங்கு பக்தர்கள் தங்களது முளைப்பாரியை தண்ணீரில் கரைத்தனர். 

Next Story