அறிவை வளர்க்கும் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்;கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேச்சு
அறிவை வளர்க்கும் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
காரைக்குடி,
அறிவை வளர்க்கும் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
நூலகம் திறப்பு விழா
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரிட்டோ வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடம் பேசியதாவது:-
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால அறிவு தேவையை கருத்தில் கொண்டு இளைய சமுதாயம் உருவாகும் வகையில் அரசு பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் உருவாக்கப்பட்டு அதில் அதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களாகிய நீங்கள் தினந்தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பாடப்புத்தகங்களை தவிர்த்து அறிவை வளர்க்கும் பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். அவ்வாறு நல்ல புத்தகங்களை படிக்கும் போது தான் நல்ல பழக்க வழங்கங்கள் ஏற்பட்டு ஒழுக்கம் தானாகவே வரும்.
நல்ல பழக்க வழக்கங்கள்
எனவே பிற செயல்களை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் நெறிமுறைகளை சொன்னபடியே வாழ்ந்து காட்டினார். அதைபோன்று மாணவர்கள் நீங்கள் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தனது கல்வி சார்ந்த குறிக்கோள் கொண்ட படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் போது அந்த படிப்பின் உச்சபட்ச நிலை, சிறந்த கல்வி நிலையங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த கல்வி நிலையங்களில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். தொடர்ந்து அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் உள்ள நூலகங்களை புதுப்பித்து பயன்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு அமைக்கப்பட்ட இந்த நூலகத்தை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஒருங்கிணைப்பு திட்ட அலுவலர் சீதாலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story