ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 25 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 25 பேர் காயம்
x
தினத்தந்தி 28 April 2022 12:54 AM IST (Updated: 28 April 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

காரியாபட்டி, 
ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 25 பேர் காயம் அடைந்தனர். 
ஜல்லிக்கட்டு 
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் நெல்லிக்குளம் வீரசூரய்யா - அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமை தாங்கினார். திருச்சுழி தாசில்தார் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் திருச்சுழி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. காலை 9 மணிக்கு கோவில் காளைகள் மற்றும் நேர்த்திக்கடன் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டதும் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, பிரிட்ஜ், சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டன. 
25 ேபர் காயம்
மாடுகள் முட்டியதில் நெல்லிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து இருளாண்டி (வயது 40), ஆவியூரைச் சேர்ந்த நேரு (21), பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (20), பாரபத்தி ரமேஷ் (34), வரிசையூர் பூபதி (22), எலியார் பத்தி பாலாமணி (22), டி.கல்லுப்பட்டி கார்த்தி (22), அலங்காநல்லூர் வெங்கடேஷ் (21), ஆவியூர் சரவணன் (24), வண்டியூர் கனகவேல் (22), சோளங்குருணி நந்தகுமார் (33), நெல்லிக்குளம் போஸ் (25) உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாயஜோஸ், மதியழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story