தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி பெரியமிளகுபாறை ஆதிதிராவிடர் தெருவில் குடிநீர் குழாய் அடைப்பை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளத்தை மூடினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், சரி செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
படிக்கட்டில் ஆபத்தான பயணம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சோமரசம்பேட்டை எட்டரை வியாழன்மேடு வழியாக கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனிக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த அரசு டவுன் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் காலை நேரங்களில் வியாழன்மேடு பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியப்படி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதலான அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
குப்பைகள் தீ வைத்து எரிப்பு
திருச்சி மாநகரில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் ஆங்காங்கே தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து பீமநகர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகளை சிலர் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு கண் எரிச்சலும் உண்டாகிறது. எனவே குப்பைகளை முைறயாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
Related Tags :
Next Story