ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக அலுவலகம் முன்பு குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மாநில துணைப்பொதுச்செயலாளர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் செல்லச்சாமி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய குறைவு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஊதிய மறுநிா்ணய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story