கிடாய் முட்டு சண்டை


கிடாய் முட்டு சண்டை
x
தினத்தந்தி 28 April 2022 1:11 AM IST (Updated: 28 April 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளுக்கு பிறகு கிடாய் முட்டு சண்டை ஐகோர்ட்டு அனுமதியுடன் நடந்தது.

சோழவந்தான், 
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடாய் முட்டு சண்டை நடந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் கிடாய் முட்டு சண்டை நடைபெறவில்லை. கிராம மக்கள் பல்வேறு முயற்சி எடுத்தும் அனுமதி கிடைக்காததால் ஐகோர்ட்டு அனுமதியுடன் கட்டுப்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு நேற்று காலை கிடாய் முட்டு சண்டை நடந்தது. நேற்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன. நிகழ்ச்சிக்கு கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஜித், குண்டுமணி வரவேற்றனர். உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன்  தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி தலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஸ் ஆகியோர் பேசி னார்கள். பவித்திரன் நன்றி கூறினார். இந்த கிடாய் முட்டு சண்டையில் கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் இருந்து 16 கிடாய் மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து 68 கிடாய்கள்  போட்டியில் கலந்து கொண்டன.கலந்துகொண்ட கிடாய் களுக்கு கமிட்டி சார்பாக பரிசு வழங்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஇருந்தனர். 

Next Story