நாகர்கோவிலில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 1:21 AM IST (Updated: 28 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், 
தமிழ்நாடு வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாகர்கோவிலில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
துணை மாநில வரி அலுவலருக்கான பதவி உயர்வு உள்பட கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை உடனே செயல்படுத்த வேண்டும், கோட்ட அளவிலான இடம் மாறுதல்களை திரும்ப பெற வேண்டும், நேரடி நியமனங்களை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், குலுக்கல் முறையில் பொது மாறுதல் என்ற முறையை ஒழித்து முழுமையான கவுன்சிலிங் முறையில் பொது மாறுதலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெனிஷ் லூயி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வணிக வரித்துறை அலுவலர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்து பணியாற்றினர்.

Next Story