கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 28 April 2022 1:29 AM IST (Updated: 28 April 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

தேவகோட்டை
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
பேட்டி
தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி.  நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் இயற்கையாக இறந்து இருக்கலாம் என்பது எனது கருத்து. அவருக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை செய்தனர் என்பது தெரிந்தது. அ.தி.மு.க.வில் இரட்டைத் தன்மை இருப்பதால் சில குழப்பங்கள் உள்ளது. அந்தக் கட்சியின் கட்டுமானமும் அடிமட்ட தொண்டர்களும் அப்படியே உள்ளனர். காங்கிரஸ் 2 நாடாளுமன்ற தேர்தல்கள், சில மாநில தேர்தல்களிலம் தோல்வியுற்றது. இதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்கள் வர வேண்டும். 
பிரசாந்த் கிஷோர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதேபோல் கட்சியிலும் பலர் கருத்துக்களை கூறியுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு. காங்கிரஸ் கட்சியும் தனது தோல்விகளில் இருந்து மீண்டு வரும். அண்ணாமலை கற்பனை உலகத்தில் இருக்கிறார். இந்த உலகத்தில் நடக்கிற விஷயங்கள் அவரது கண்களுக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது மாங்குடி எம்.எல்.ஏ., அப்பச்சிசபாபதி, வழக்கறிஞர் சஞ்சய் ஆகியோர் இருந்தனர்.
சுகாதார திருவிழா 
மேலும் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த மணலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆகியவற்றின் சார்பில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அரசி முன்னிலை வகித்தார். முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடக்கி வைத்தார். முகாமில் இ.சி.ஜி., மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் நரம்பியல், பல், கண், புற்று நோய் பிரிவு, காச நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முகாம் நடைபெறுவதை கார்த்தி சிதம்பரம் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
முகாமில் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் யோகவதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், யூனியன் துணை தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story