சிறப்பு மருத்துவ முகாம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 April 2022 1:31 AM IST (Updated: 28 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

வெள்ளியணை, 
தாந்தோன்றி வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் பாகநத்தம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். இம்முகாமில் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு நோய்களுக்கான பொது மருத்துவமும், கண் குறைபாடுகள் என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 
வேலாயுதம்பாளையம் காந்தியார் தொடக்க பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார். முகாமில், வட்டார மருத்துவர் ரஞ்சிதா, ஒலப்பாளையம் மருத்துவர் அனிதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு இதயம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


Next Story