நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவில்,
கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் டயர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அந்த நிறுவனத்தின் அருகில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் விஷப்பாட்டில் ஒன்றும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடசேரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கல்பாக்கத்தில் உள்ள அவருடைய மனைவிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.
சரவணன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? கடன் பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story