அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 April 2022 1:33 AM IST (Updated: 28 April 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குளித்தலை, 
சித்திரை திருவிழா
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற சிவத் தலங்களில் முதன்மையானது. இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. 
இதையொட்டி நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் முகூர்த்தக்கால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பலர் ஒன்று கூடி இந்த மண்டபத்தின் முன்பு முகூர்த்தக்காலை ஊன்றினர். 
5-ந்தேதி கொடியேற்றம்
இதனைத்தொடர்ந்து திருவிழா தொடங்கும் நாள் மற்றும் எந்தெந்த நாட்களில் எவ்வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் இந்த முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் நிர்வாகத்தினர், கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது. 
இக்கோவிலின் சித்திரை திருவிழா வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

Next Story