பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
நச்சலூர்,
குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இனுங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை கல்யாணி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பெற்றோர்கள் முன்னிலையில் பள்ளியின் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் புதிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story