ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கரூரில் தாலுகா அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரக்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார். ஊராட்சி செயலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு வட்டத்திற்குள் பணியிட மாறுதல் செய்வதுடன், ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுரு எழுத்தருக்கு உண்டான அனைத்து அரசு சலுகைகளையும் உடனே வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கூலி தொகையாக ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story