தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு


தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 28 April 2022 1:39 AM IST (Updated: 28 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தில் வசிப்பவர் கமலா (வயது 83). இவர் வீட்டில் அடுப்பை பற்ற வைக்கும் போது சேலையில் தீப்பிடித்து தீக்காயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story