லால்குடி அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது


லால்குடி அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 April 2022 1:40 AM IST (Updated: 28 April 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி, ஏப்.28-
லால்குடி அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
லால்குடி அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் உள்ள  கூழையாற்றில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மணிகண்டன் மகன் ரஞ்சித்குமார் (24) டார்ச் லைட்டை ராமச்சந்திரன் முகத்தில் அடித்துள்ளார்.
இது தொடர்பாக கேட்டதற்கு ராமச்சந்திரனுக்கும், ரஞ்சித்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்ஆத்திரம்அடைந்தரஞ்சித்குமார்ராமச்சந்திரனையும், அவரது மகன் ஜெகனையும் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த தந்தை, மகனும் திருச்சிஅரசுமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

Next Story