பருத்தி செடியை சேதப்படுத்தும் பன்றிகள்


பருத்தி செடியை சேதப்படுத்தும் பன்றிகள்
x
தினத்தந்தி 28 April 2022 1:51 AM IST (Updated: 28 April 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

பருத்தி செடியை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஆலங்குளம், 
பருத்தி செடியை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
பருத்தி சாகுபடி 
ஆலங்குளம் அருகே உள்ள நரிக்குளம், மேலாண்மறைநாடு, அருணாசலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 
அத்துடன் ஆடுகளுக்கு இரையாக பயன்படும் சவுண்டை செடியும் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது பருத்தி நன்கு விளைந்து காய் பருவத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் உள்ள பன்றிகள் இந்த பருத்தி செடியை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நிவாரணம் 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 
ஆலங்குளம் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். தற்போது காய் பருவத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஆற்றுப்பகுதியில் இருந்து பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து பருத்தி செடியை தாக்குகிறது. 
அத்துடன் ஊடுபயிராக உள்ள சவுண்டை செடியையும் சேதப்படுத்தி விடுகிறது. கடன்பட்டு, கஷ்டப்பட்டு வளர்ந்த செடிகள் அனைத்தும் பன்றியின் தாக்குதலால் வீணாகி வருகிறது. பயிர்களை சேதப்படுத்தும் பன்றி, மான் ஆகியவற்றை  பிடித்து வனத்துறை பகுதியில் கொண்டு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story