கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து பெண் சாவு
அம்மாபேட்டை அருகே கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
அம்மாபேட்டை அருகே கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
தவறி விழுந்த பெண்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி ஈஸ்வரி என்கிற ராஜேஸ்வரி (வயது 49). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ரேவதி உள்பட 2 மகள்கள் உள்ளனர். 2 பேரும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர். ராஜேஸ்வரி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
அம்மாபேட்டை அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி நேற்று முன்தினம் தனது ஊரைச் சேர்ந்த சிலருடன் கட்டிட வேலைக்கு சென்றிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் நின்று அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
சாவு
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரியின் மகள் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story