துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 2:41 AM IST (Updated: 28 April 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:-
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி துப்புரவு பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பெயர் விடுபட்ட அனைத்து மாவட்ட பணியாளர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story