தர்மபுரி மாவட்டம் முழுவதும் 30-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் 30-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
x
தினத்தந்தி 28 April 2022 2:42 AM IST (Updated: 28 April 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 30-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும்  30-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் தர்மபுரி மாவட்டம் முழுவதும்  30-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 700 சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஜூன் 2021-க்கு முன் 2-வது தடுப்பூசி செலுத்தி கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது “பூஸ்டர் தடுப்பூசி” செலுத்தி கொள்ள வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மீறினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story