கார் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள சல்லையகவுண்டனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் சாலையூர் நால்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கலில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மணிண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, கேதையுறும்பை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story