மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2022 4:59 PM IST (Updated: 28 April 2022 4:59 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே, நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள திரவியம் நகரை சேர்ந்தவர் மாரியப்பன். அவருடைய மனைவி பாக்கியம் (வயது 60). கடந்த சில ஆண்டுகளாக இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டார். 

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த பாக்கியம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து பாக்கியத்தின் மகன் நாகராஜ் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முத்தையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story