போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த மாநிலக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த மாநிலக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 April 2022 6:12 PM IST (Updated: 28 April 2022 6:12 PM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த மாநிலக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, 

போலி சான்றிதழ் கொடுத்து சிலர் பணியில் சேர்ந்துள்ளதாக உயர்கல்வித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து உயர் கல்வித்துறை தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை நடத்தியது. இதில், சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி மற்றும் சேதுலதா ஆகிய 2 பேரும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரையும் உயர்கல்வித்துறை ‘சஸ்பெண்ட்' (இடைநீக்கம்) செய்து உத்தரவிட்டு உள்ளது.

காமாட்சி 2009-ம் ஆண்டிலும், சேதுலதா 2011-ம் ஆண்டிலும் உதவிப் பேராசிரியராக மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காமாட்சி மற்றும் சேதுலதா ஆகிய 2 பேர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவர்கள் 2 பேர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

Next Story