விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய கட்ன அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலம் விவசாய கடன் தொகை பெற விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்திலும், ஆதியூர் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திலும் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், உதவி இயக்குனர் ராகினி, உதவி அலுவலர் ஸ்வத்திகா, விவசாயிகளிடம் மனுக்களை பெற்றனர். முகாமில் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று எழுதி கொடுப்பதிலும் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அனைத்து கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டை பெறுவதற்கு தேவையான அடங்கல்களை உடனடியாக முகாம் நடைபெற்ற இடத்திலேயே வழங்கினார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முகாமில் வங்கி மேலாளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story