பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2022 6:53 PM IST (Updated: 28 April 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுக்கம்பாறை

வேலூர் அருகே அடுக்கம்பாறை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் பிரவீனா (வயது 18). இவர் வேலூரில் உள்ள விநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால் சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவியை அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு வற்புறுத்தினர்.

இதனால் மனமுடைந்த பிரவீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story