விபத்தில் சமையல்காரர் பலி


விபத்தில் சமையல்காரர் பலி
x
தினத்தந்தி 28 April 2022 7:03 PM IST (Updated: 28 April 2022 7:03 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சமையல்காரர் பலியானார்.

பெரியகுளம்:
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 42). சமையல்காரர். இவர் நேற்று பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வழியில் எ.புதுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் சில்வார்பட்டியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சேகரின்  மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சேகர் பலியானார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story