வாலாஜா பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
வாலாஜா பஸ் நிலையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு ெசய்தாா்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பாஸ்புட் கடைகளில் தரமற்ற உணவு வகைகள் விற்கப்படுவதாகவும் கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா பஸ் நிலையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழக்கடைகள், பூ கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகள், பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தார்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுகாதாரமற்ற உணவுகளை விற்பது சமூக குற்றமென கடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன், உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story